மிகச்சிறியோரில் இயேசுவைக் கண்டு அரவணைப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இந்நாட்களில் உலகில் காணப்படும் மிகச்சிறியோரில் இயேசுவைக் கண்டு அவரை அரவணைப்போம், என டிசம்பர் 27, திங்களன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'இக்காலத்தின் மிகச்சிறியோரில் இயேசுவைக் கண்டு அவரை அரவணைப்போம், மிகச்சிறியோராகிய சகோதரர் சகோதரிகளில் அவரை அன்புகூர்வோம்,' என தன் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'ஏழையாகப் பிறந்த இயேசுவைப் போன்றவர்கள் இவர்கள், இவர்களில் தான் கௌரவிக்கப்படவேண்டும் என இயேசு விரும்புகிறார்', என மேலும் அதில் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் இந்த கிகிறிஸ்மஸ் கால டுவிட்டர் செய்தி, ஏழைகளுக்கும், சமுதாயத்தில் ஓரம் கட்டப்பட்டவர்களுக்கும் உதவுவதை வலியுறுத்துவதாக உள்ளது.
ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் திருத்தந்தையால் வழங்கப்பட்டுவரும் டுவிட்டர் செய்திகளை இணையத்தில் ஆங்கில மொழியில் இதுவரை பின்பற்றியுள்ளோரின் எண்ணிக்கை 1 கோடியே 88 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்