தேடுதல்

மால்ட்டாவுக்குச் சென்ற விமானப் பயணத்தில் ஊடகவியலாளருக்கு திருத்தந்தை நன்றி மால்ட்டாவுக்குச் சென்ற விமானப் பயணத்தில் ஊடகவியலாளருக்கு திருத்தந்தை நன்றி 

விமானப் பயணத்தில் ஊடகவியலாளருக்கு திருத்தந்தை நன்றி

“மத்தியதரைக் கடலின் மத்தியில் சுடர்விடுகின்ற அழகுமிக்க மால்ட்டா நாட்டிற்கு எனது மேய்ப்புப்பணியைத் துவக்குகிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இத்தாலிய கால்பந்து விளையாட்டு வீரரான Gigi Riva அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட A320 ITA விமானத்தில், உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் பகல் 12 மணிக்கு, 74 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும், வத்திக்கான் அதிகாரிகளுடன், மால்ட்டா தீவு நாட்டிற்குப் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணத்தின்போது இத்தாலிய அரசுத்தலைவர் ஜெர்ஜோ மத்தரெல்லா (Sergio Mattarella) அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பிய நல்வாழ்த்து தந்திச் செய்தியில், “மத்தியதரைக் கடலின் மத்தியில் சுடர்விடுகின்ற அழகுமிக்க மால்ட்டா நாட்டிற்கு எனது மேய்ப்புப்பணியைத் துவக்குகிறேன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலர் வந்துபோகின்ற இத்தீவு நாட்டில் வாழ்கின்ற மக்களையும், கத்தோலிக்கரையும் சந்திக்கவிருப்பதில் மகிழ்கின்றேன், தங்களுக்கும் இத்தாலியர் அனைவருக்கும் அமைதியும் கனிவும் நிறைந்த நல்வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். மேலும், இவ்விமானப் பயணத்தின் துவக்கத்தில், மால்ட்டா திருத்தூதுப் பயணங்கள் பற்றிய செயதிகளை வழங்கவிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு காலை வணக்கம் சொல்லி வாழ்த்திய திருத்தந்தை, இப்பயணம் குறுகியதாய் இருந்தாலும் அழகானது என்று சொல்லி, அவர்களின் ஊடகப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார். அச்சமயத்தில் ஒரு பத்திரிகையாளர், திருத்தந்தையிடம், உக்ரைன் நாட்டின், கீவ் தலைநகருக்கு அழைப்பிதழ் வந்தால் அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வீர்களாக என்று கேட்டார். அதற்கு திருத்தந்தை, ஆமாம். அந்த அழைப்பிதழ் எனது மேஜையில் உள்ளது என்று பதில் கூறினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2022, 17:00