தேடுதல்

மால்ட்டா இயேசு சபையினருடன் திருத்தந்தை மால்ட்டா இயேசு சபையினருடன் திருத்தந்தை  

மால்ட்டா இயேசு சபையினருடன் கலந்துரையாடிய திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மால்ட்டா திருத்தூதுப் பயணத்தில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்த அனுபவங்களை இயேசு சபையினருடன் பகிர்ந்துகொண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

திருத்தந்தையின் மால்ட்டா நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின்போது, ஏப்ரல் 3, ஞாயிற்றுக்கிழமை காலை மால்ட்டா இயேசு சபையினரை சந்தித்தவேளையில், நற்செய்தி அறிவித்தலின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் பயணக் குழுவில் ஒருவராக இடம்பெற்ற, இயேசு சபை அருள்பணி Antonio Spadaro அவர்கள் உரைக்கையில், இயேசு சபையினரின் வாழ்வில் முக்கிய கூறாக இருக்கும் நற்செய்தி அறிவித்தல் குறித்து மால்ட்டா இயேசு சபையினருடன் திருத்தந்தை தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதாகவும், நற்செய்தி அறிவிப்புப்பணியில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து விவாதித்ததாகவும் கூறினார்.

சிவில்த்தா கத்தோலிக்கா என்ற இயேசு சபை இதழின் இயக்குனரான அருள்பணி Spadaro அவர்கள், இத்திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை நடத்திய புலம்பெயர்ந்தோருடனான சந்திப்பு குறித்து இயேசு சபையினருடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார்.

மால்ட்டாவில் ஞாயிறு திருப்பலியின் இறுதியில் வழங்கப்பட்ட நண்பகல் மூவேளை செபவுரையில், உக்ரைன் போர், மதத்தை இழிவுபடுத்துவதாகவும், இறைவனுக்கு எதிரான குற்றமாகவும் உள்ளது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் ஒருமுறை பயன்படுத்தியுள்ள வார்த்தைகள், இப்போர் குறித்த அவரின் மனவேதனையைக் காண்பிக்கிறது எனவும் கூறினார், இயேசு சபை அருள்பணி Spadaro.

தான் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில் வாழும் இயேசு சபையினரை அங்கேயே சந்தித்து கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அர்ஜென்டீனாவில் இயேசு சபை மாநிலத் தலைவராகப் பணியாற்றியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2022, 15:38