உக்ரைனுக்குச் செல்ல சாதகமான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்
"சிறார் இரயில்" என்ற நிகழ்வை, இத்தாலிய தேசிய இரயில் துறையின் ஒத்துழைப்போடு திருப்பீட கலாச்சார அவை ஏற்பாடு செய்தது
மேரி தெரேசா: வத்திக்கான்
- “சிறார் இரயில்” என்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஏறத்தாழ 200 சிறாரை, மே 4 இச்சனிக்கிழமை முற்பகலில், வத்திக்கானின் San Damaso வளாகத்தில் சந்தித்து அச்சிறார் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
- உக்ரைனிலிருந்து புலம்பெயர்ந்து இத்தாலி வந்துள்ள சிறுவன் ஒருவன், திருத்தந்தையே, தாங்கள் எப்போது கீவ் நகருக்குச் செல்வீர்கள் எனக் கேட்டதற்குப் பதிலளித்த திருத்தந்தை, உக்ரைனுக்குச் செல்ல விருப்பம்தான், ஆனால், அதற்குத் தகுந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன் என்று கூறினார்.
- தற்போதைய சூழல் பாதுகாப்பானது அல்ல எனவும், வருகிற வாரத்தில் உக்ரைன் அரசின் பிரதிநிதிகளைச் சந்திப்பேன், அச்சமயத்தில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது குறித்த வாய்ப்பு பற்றியும் பேசுவேன் என்றும் திருத்தந்தை அச்சிறுவனிடம் கூரிநார்.
- "சிறார் இரயில்" என்ற நிகழ்வை, இத்தாலிய தேசிய இரயில் துறையின் ஒத்துழைப்போடு திருப்பீட கலாச்சார அவை ஏற்பாடு செய்தது. திருப்பீட கலாச்சார அவை நடத்தும் புற இனத்தார் மன்றம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
04 June 2022, 15:23