தேடுதல்

கத்தோலிக்க பெண்கள் நிறுவனங்களின் உலக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கத்தோலிக்க பெண்கள் நிறுவனங்களின் உலக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 

திருத்தந்தை, WUCWO/UMOFC கூட்டமைப்பு சந்திப்பு

கத்தோலிக்க பெண்கள் நிறுவனங்களின் உலக கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டு கருத்தரங்கில், இலத்தீன் அமெரிக்கா மற்றும், ஆப்ரிக்காவிலுள்ள பெண்களின் நிலை கவனம் செலுத்தப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்க பெண்கள் நிறுவனங்களின் உலக கூட்டமைப்பின் (WUCWO/UMOFC) ஒன்பது பிரதிநிதிகளை, ஜூன் 11, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஜூன் 14, வருகிற செவ்வாயன்று உரோம் நகரின் Altieri மாளிகையில் இப்பெண்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டு கருத்தரங்கில், இலத்தீன் அமெரிக்கா மற்றும், ஆப்ரிக்காவிலுள்ள பெண்களின் நிலை கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பெண்கள் கண்காணிப்பு உலக அமைப்பு, இலத்தீன் அமெரிக்கா மற்றும், ஆப்ரிக்காவில் ஆற்றிவரும் பணிகள், கோவிட்-19 பெருந்தொற்று, இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் நாடுகளில் பெண்களில் ஏற்படுத்தியுள்ள எதிர்த்தாக்கங்கள் போன்றவை இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படும்.

ஆயர்கள் பேராயத்தின் தலைவரும், இலத்தீன் அமெரிக்க பாப்பிறை அமைப்பின் தலைவருமான கர்தினால் Marc Ouellet, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைத் (CELAM) தலைவர் பேராயர் Miguel Cabrejos Vidarte, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் செயலரும், வத்திக்கான் கோவிட்-19 ஆணைக்குழுவின் பிரதிநிதியுமான அருள்சகோதரி Alessandra Smerilli, இலத்தீன் அமெரிக்க பாப்பிறை அமைப்பின் செயலர் பேராசிரியர் Emilce Cuda ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை, அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, கொலம்பியா, ஹெய்ட்டி, நெதர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களின் ஒத்துழைப்போடு, WUCWO அமைப்பு, இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2022, 14:37