தேடுதல்

திருத்தந்தை, Ursula von der Leyen திருத்தந்தை, Ursula von der Leyen  

திருத்தந்தை, Ursula von der Leyen சந்திப்பு

ஜெர்மன் நாட்டவரான Ursula Gertrud von der Leyen அவர்கள், 2019ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியிலிருந்து ஐரோப்பிய அவையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஐரோப்பிய அவையின் தலைவர் Ursula von der Leyen அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஜூன் 10, இவ்வெள்ளி காலையில், ஏறத்தாழ இருபது நிமிடங்கள் திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது

Ursula von der Leyen அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தபின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார்.

திருப்பீட செயலகத்தில் இதமான சூழலில் இடம்பெற்ற இச்சந்திப்பில், திருப்பீடத்திற்கும், ஐரோப்பிய அவைக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், உக்ரைனில் நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவது போன்ற விவகாரங்கள் இடம்பெற்றன என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

மேலும், உக்ரைனில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போரினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான மற்றும் உணவு நெருக்கடிகளைக் களைவது குறித்தும், ஐரோப்பாவின் வருங்காலம், மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலத்தை வடிவமைப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றுள்ளன

நம் கரங்களை மற்ற கரங்களோடு இணைப்போம் என்று எழுதப்பட்ட, இரு கரங்கள் ஒன்றையொன்று இறுகப் பற்றிக்கொள்வதைச் சித்தரிக்கும் வெண்கலப் பதக்கம் ஒன்றையும், திருத்தந்தையின் இவ்வாண்டு உலக அமைதி நாள் செய்தி, திருமடல்கள் போன்றவற்றை ஐரோப்பிய அவையின் தலைவருக்குப் பரிசாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2022, 16:14