திருத்தந்தை, செக் குடியரசின் பிரதமர் சந்திப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
செக் குடியரசின் பிரதமர் Petr Fiala அவர்களை, ஜூன் 9, இவ்வியாழன் காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார் பிரதமர் Petr Fiala.
திருப்பீடச் செயலகத்தில் நடந்த இந்தச் சுமூகமான கலந்துரையாடலின் போது, திருப்பீடத்திற்கும் செக் குடியரசிற்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் சமுதாயத்தில் திருஅவையின் பங்கு குறித்தும், இவை இரண்டிற்கிடையேயான ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து மேலும் விரிவுபடுத்தும் நம்பிக்கை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் மனிதாபிமான நிலைமை மற்றும் புலம்பெயர்ந்தோர் வரவேற்பு ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், உக்ரேனிய போர், மாநில மற்றும் பன்னாட்டளவில் அதன் தாக்கம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது அதிகம் பேசப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்