தேடுதல்

வயது முதிர்ந்த ஒருவரைச் சந்திக்கும் திருத்தந்தை வயது முதிர்ந்த ஒருவரைச் சந்திக்கும் திருத்தந்தை  

வரவேற்றலின், செவிமடுத்தலின், கலந்துரையாடலின் திருஅவையாக உருமாற

ஒன்றிணைந்த பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் ஒவ்வொருவரும் எழுந்து சென்று உலகை எதிர்கொள்ளும் திருஅவையாக மாற வேண்டும். – திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திரு அவையின் ஒன்றிணைந்த பயணத்தில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் எழுந்து சென்று உலகை எதிர்கொள்ளும் திருஅவையாக மாற வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜீன் 30 இவ்வியாழனன்று வெளியிட்ட தன் டுவிட்டர் குருஞ்செய்தியில்  கூறியுள்ளார்.

தூய ஆவியின் வல்லமையின் கீழ், செயல்படுகின்ற, ஒவ்வொருவரும் வரவேற்கப்படுவதை உணரவைக்கின்ற, செவிமடுத்தல், கலந்துரையாடுதல், பங்கேற்பு என்பவைகளை உருவாக்குகின்ற ஒரு திருஅவையாக நாம் உருமாற வேண்டும் என்றும் தன் டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.  

மேலும், தங்களது சந்ததியின் அடித்தள வேர்களையும் நினைவுகளையும் அடையாளப்படுத்தும் வயது முதிர்ந்தவர்களுக்காக நாம் செபிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதியோரின் அனுபவமும் ஞானமும், வளரும் இளைய தலைமுறையினருக்கு எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையையும், பொறுப்புணர்வையும் தந்து உதவுகிறது என்பதால், அவர்களுக்காக சிறப்பாக செபிக்க கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2022, 14:10