தேடுதல்

மெக்சிகோவில் வறுமை மெக்சிகோவில் வறுமை 

போரின் அறிவற்றதன்மை வறுமையை பெருக்கியுள்ளது

புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி அவை, வருகிற நவம்பர் 13ம் தேதிக்கு முந்தைய வாரத்தில், ஏழைகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – பேராயர் ஃபிசிக்கெல்லா

மேரி தெரேசா: வத்திக்கான்

போரின் அறிவற்றதன்மையால் வறுமை எவ்வளவு பெரிய அளவில் உருவாகியுள்ளது, எங்கு நோக்கினும், பாதுகாப்பற்றவர்கள் மற்றும், வலுவற்றவர்களை வன்முறைத் தாக்குவதை நம்மால் காணமுடிகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 14, இச்செவ்வாயன்று, 6வது வறியோர் உலக நாளை மையப்படுத்தி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.

6வது வறியோர் உலக நாள் செய்தியை இணையத்தில் வாசிப்பதற்கு உதவியாக, முகவரியும் இச்செய்திகளோடு இணைத்துத் தரப்பட்டுள்ளது. 

https://www.vatican.va/content/francesco/en/messages/poveri/documents/20220613-messaggio-vi-giornatamondiale-poveri-2022.html

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 6வது வறியோர் உலக நாள் செய்தியை, ஜூன் 14, இச்செவ்வாயன்று, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி அவையின் தலைவரான பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள் தலைமையில் இருவர் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டனர்.

இச்செய்தியை வெளியிட்டுப் பேசிய பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், போரின் அறிவற்றதன்மையால் பலர் ஏழைகளாகியுள்ளனர் எனவும், வருகிற நவம்பர் மாதம் 13ம் தேதி சிறப்பிக்கப்படும் 6வது வறியோர் உலக நாள் செய்தியில், திருத்தந்தையின் இந்தக் கவலை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

போர்களால் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும், அவை இடம்பெறும் பகுதிகளில் மட்டுமன்றி, அதற்கு அருகிலுள்ள நாடுகளிலும் இலட்சக்கணக்கான மக்கள் துன்புறுகின்றனர் என்றும் உரைத்துள்ள பேராயர், நம் பிறரன்புச் செயல்களால் அவர்களுக்கு உதவவேண்டும் என்று இந்த உலக நாள் செய்தியில் திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி அவை, வருகிற நவம்பர் 13ம் தேதிக்கு முந்தைய வாரத்தில், ஏழைகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும், கடந்த ஆண்டில் உரோம் மறைமாவட்டத்தில் ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன எனவும், பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் சுட்டிக்காட்டினார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2022, 15:01