கைம்மாறு கருதாமல் நற்செய்திக்குப் பணியாற்றவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
நற்செய்திக்கும், நம் சகோதரர், சகோதரிகளுக்கும் பணியாற்றுவது என்பது, கைம்மாறு கருதாமல் நம் வாழ்வை அர்ப்பணிப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 27, இத்திங்களன்று வெளியிட்ட தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.
நற்செய்திக்கும், நம் சகோதரர், சகோதரிகளுக்கும் பணியாற்றுவது என்பது, எவ்வித உலக மகிமையையும் தேடாமல், நம் வாழ்வை அர்ப்பணிப்பதாகும், இதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், அச்செய்தியில் திருத்தந்தை பதிவுசெய்துள்ளார்.
திருப்பீட நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயம்
திருஅவையில் சில அருள்பணியாளர்களால் இடம்பெறும் பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரங்களைக் கையாள்வதற்கு உதவியாக, திருப்பீட நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இத்தகைய வழிகாட்டுதல்களின் முதல் பதிவு, இரு ஆண்டுகளுக்குமுன்னர் வெளியிடப்பட்டது. தற்போது அவ்வழிகாட்டுதல்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட இரண்டாம் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வழிகாட்டுதல்களில் கூடுதல் இணைப்பு, பரிந்துரைகள் போன்றவை வரவேற்கப்படுகின்றன என்று, திருப்பீட நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்