தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை: எல்லாச் சூழல்களிலும் இடைவிடாமல் செபிக்கவேண்டும்

உலகில் போர் இடம்பெறும் பகுதிகளில் அமைதி நிலவவும், பல்வேறு காரணங்களால் புலம்பெயரும் மக்களுக்காகவும் செபியுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

எல்லாமே பயனற்று இருப்பதாகத் தெரிகின்றவேளையிலும்கூட கிறிஸ்தவர்கள், பற்றுறுதியோடு இடைவிடாமல் இறைவேண்டல் செய்யவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 13, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தி வழியாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.

“கடவுள் நம் செபங்களுக்குப் பதிலளிக்கவில்லை, செபித்து நாம் நேரத்தை வீணாகச் செலவழிக்கின்றோம், எல்லாமே வீண் போன்ற உணர்வுகள் எழுகின்றபோதும்கூட, நாம் எப்போதும் செபிக்கவேண்டும். விண்ணகம் நமக்கு மறைவாய் இருக்கின்றது என்று உணரும்போதும்கூட கிறிஸ்தவர்கள் இறைவேண்டல் செய்வதை நிறுத்திவிடக் கூடாது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

இவ்வாறு இடைவிடாமல், நம்பிக்கையோடு கடவுளை நாம் மன்றாடவேண்டும் என அடிக்கடி வலியுறுத்திவருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் போர் இடம்பெறும் பகுதிகளில் அமைதி நிலவவும், போர், வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் புலம்பெயரும் மக்களுக்காகவும் செபிக்கவேண்டும் என்று அழைப்புவிடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2022, 14:37