தேடுதல்

Fiona புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் Fiona புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள்  

Fiona புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிக்கப்பட..

நாம் உற்பத்தி செய்யும் முறைகளும், வாழும் விதமும், அனைத்து மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதாய் இருக்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நாம் உற்பத்திசெய்யும் முறைகளும், வாழும்முறையும் படைப்பை மதிப்பதாய் அமைந்திருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்தை மையப்படுத்தி, படைப்பின் காலம் (#TempodelCreato) என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 22, இவ்வியாழனன்று, திருத்தந்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில், நாம் உற்பத்தி செய்யும் முறைகளும், வாழும் விதமும், அனைத்து மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதாய் இருக்கவேண்டும் என்றும், மனிதருக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையேயுள்ள உடன்பாடு, படைத்தவராம் கடவுளின் அன்பை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

Fiona புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு

மேலும், தொமினிக்கன் குடியரசு, புவர்த்தோ ரிக்கோ ஆகிய கரீபியன் பகுதி குடியரசுகளில் Fiona புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கிறிஸ்தவர்கள் ஆதரவளிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

செப்டம்பர் 21, இப்புதனன்று அந்நாடுகளின் ஆயர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திருத்தந்தையின் செபங்களும் ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 19, இத்திங்களன்று பெய்த கனமழை மற்றும், புயலால், புவர்த்தோ ரிக்கோ குடியரசில், 13 இலட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் மற்றும், தொழில்களுக்கு மின்வசதி கிடையாது. 30 செ.மீ. அளவில் பெய்த மழையால் வீடுகளும், சாலைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. 

தொமினிக்கன் குடியரசில், 11 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வசதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2022, 15:41