தேடுதல்

 திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருவருகைக் காலம் புது வாழ்வு தருகிறது : திருத்தந்தை

திருவருகைக் காலம் இறைவனின் பரிவிரக்கத்தைக் காணவும், நமது வாழ்வை மாற்றும் புதிய கண்ணோட்டத்தைப் பெற உதவுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

திருவருகைக் காலம் என்பது நமது கண்ணோட்டத்தை மாற்றம் பெறச் செய்ய உதவும் காலம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டர் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

டிசம்பர் 15, இவ்வியாழனன்று தான் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலநேரங்களில், இறைவனைப் பற்றி நாம் ஏற்கனவே அதிகம் அறிந்திருக்கிறோம் என்ற அனுமானத்துடன் செயல்படும்போது, இறைவனின் புதிய தன்மையை அடையாளம் காண முடியாது என்றும், திருவருகைக் காலம் இறைவனின் பரிவிரக்கத்தைக் காணவும், நமது வாழ்வை மாற்றும் புதிய கண்ணோட்டத்தைப் பெற உதவுகிறது. என்றும் கூறியுள்ளார்.

டிசம்பர் 14, இப்புதன் காலையில் தனது பொது மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழாக் கொண்டாட்டங்கள், மற்றும், அப்பெருவிழாவிற்கு ஆன்மிகத் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ள நாம், உக்ரேனிய மக்களுக்காக இறைவேண்டல் செய்வோம் என்றும், அவர்களோடு நமது உடனிருப்பை தெரிவிப்போம் என்றும் திருப்பயணிகளிடம் விண்ணப்பித்ததுடன்,  கிறிஸ்மஸ் பெருவிழாவுக்காகச் செலவழிக்கும் பணத்தைக் குறைத்து, அதைப் போரால் துன்புறும் உக்ரேனியர்களுக்கு உதவுவோம் என்றும்  அனைத்துத் திருப்பயணிகளிடமும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2022, 13:54