தேடுதல்

திருவருகைக் காலம், வாரம் 2 திருவருகைக் காலம், வாரம் 2 

அமைதியின் செயல்பாடுகளுடன் திருவருகைக் காலம்

புரிந்துகொள்ளுதல், உடனிருப்பு, மன்னிப்பு, சேவை என்பவை, நம்மை பெத்லகேமை நோக்கி அழைத்துச் செல்லும் படிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வொரு நாளும் அமைதியின் சிறு சிறு செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு திருவருகைக் காலப் பயணத்தை இக்காலத்தில் தொடர வாழ்த்துகிறேன் என, டிசம்பர் 06,  இச்செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புரிந்துகொள்ளுதல், உடனிருப்பு, மன்னிப்பு, சேவை என்னும் வரவேற்கத்தக்க செயல்பாடுகள் இதயத்திலிருந்து எழும்போது, அவை நம்மை பெத்லகேமை நோக்கி, அமைதியின் அரசராம் இயேசுவை நோக்கி எடுத்துவைக்கும் படிகள் என்பதை மனதில்கொண்டு, இத்திருவருகைப் பயணத்தை அமைதியின் பணியில் தொடர்வோம் என தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை 4,542 செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளை இதுவரை ஆங்கிலத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 1 கோடியே 89 இலட்சமாக உள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2022, 14:51