தேடுதல்

திருத்தந்தைக்கு காங்கோ குடியரசு வரவேற்பு

சனவரி 31 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 7.30 மணிக்கு காங்கோ குடியரசின் தலைநகரான கின்சாசா வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சனவரி 31 ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை 8.10 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரப்படி நண்பகல் 12.40 மணிக்கு தனது 40 ஆவது திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை மாலை 3 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 7.30 மணிக்கு காங்கோ  குடியரசின் தலைநகரான கின்சாசா வந்தடைந்தார். காங்கோ குடியரசு திருப்பீடத்தூதரும்  Vittoriana உயர் மறைமாவட்டப் பேராயரான Ettore Balestrero மற்றும் காங்கோ அரசுத்தூதர் Jean-Pierre Hamuli Mupenda ஆகியோர் திருத்தந்தையை கின்சாசா N’djili விமானநிலையத்தில் வரவேற்றனர்.

அதன் பின்  காங்கோ குடியரசின் அரசுத்தலைவர் Felix Tshisekedi, அவர்கள் திருத்தந்தையை வரவேற்க, இரண்டு சிறார் பாரம்பரிய உடையுடன் திருத்தந்தைக்கு மலர்களைக் கொடுத்து வரவேற்றனர்.

திருத்தந்தை தலைமைத்துவப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை அதாவது 2015ஆம் ஆண்டு  Kenya, Uganda மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு,  2017ஆம் ஆண்டு Egypt, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் Morocco, Mozambique, Madagascar மற்றும் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் Mauritius இடங்களுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2023, 15:57