தேடுதல்

திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியின் போது காணிக்கைப் பொருட்களை வழங்கிய சிறாருடன் திருத்தந்தை திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியின் போது காணிக்கைப் பொருட்களை வழங்கிய சிறாருடன் திருத்தந்தை 

குழந்தைப்பருவ மறைப்பணியாளர்கள் இயேசுவின் நண்பர்கள்

திருமுழுக்குப் பெற்ற குழந்தைகள் ஒவ்வொருவரும் கடவுளின் மறைப்பணியாளர்கள் - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருக்காட்சிப் பெருவிழாவன்று நினைவுகூரப்படும் உலக குழந்தைப்பருவ மறைப்பணியாளர் நாளை முன்னிட்டு இயேசுவின் நண்பர்களாக இருந்து நற்செய்தியை அறிவிக்கும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 06 வெள்ளி, திருக்காட்சிப் பெருவிழாவன்று வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்னர், இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்குப் பெற்ற குழந்தைகள் ஒவ்வொருவரும் கடவுளின் மறைப்பணியாளர்கள் என்பதை வலியுறுத்திக் கூறி அவர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசுவின் நண்பர்களாக இருந்து மகிழ்ச்சியைப் பரப்பவும்,  நற்செய்தியின் மறைப்பணியாளார்களுக்குத் தங்களது செபம், தியாகம் மற்றும்  காணிக்கைகள் வழியாகத் தங்களை அர்ப்பணித்த அனைத்து சிறாரையும் தான் வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை. 

viva la Befana அணிவகுப்பு

கிறிஸ்மஸ் பெருவிழாவிற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உரோம் நகரத்திற்கு வருகை தந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, ஒற்றுமை மற்றும் உடன்பிறந்த உறவு என்ற கருப்பொருளில் FOLIGNO நகராட்சியால் இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க viva la befana அணிவகுப்பில் பங்கேற்றவர்களையும் பாராட்டியுள்ளார்.

FOLIGNO ஆயர்கள், மேயர், அரசு அதிகாரிகள், இயக்கங்கள், பள்ளிகள், இசைக்குழுக்கள் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க Giostra della Quintana நிகழ்வை புதுப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாள்களில் போலந்தின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடக்கும் மூன்று ஞானியர் அணிவகுப்பையும் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2023, 15:14