தேடுதல்

Order of Malta அமைப்பின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை Order of Malta அமைப்பின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை   (ANSA)

நல்ல ஆயனாம் இயேசுவோடு ஒரு நல்ல சமாரியராக செயல்படுதல்

தேவையிலிருக்கும் மக்களின் முகங்களில் இயேசுவைக் கண்டுகொள்வது Order of Malta அமைப்பின் குறிக்கோளாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றதை இலவசமாகவே வழங்கி இறையன்பிற்கு சாட்சியாக விளங்கிவரும் Order of Malta என்றழைக்கப்படும் மால்ட்டா அமைப்பின் அங்கத்தினர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை.

ஏழைகளுக்கும் நோயுற்றோருக்கும் ஆற்றும் தங்களின் சேவைகளின் வழி இறைவனுக்கு தொண்டாற்றிவரும் மால்ட்டா அமைப்பின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை திருப்பீடத்தில் சந்தித்து உரைவழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையிலிருக்கும் மக்களின் முகங்களில் இயேசுவைக் கண்டுகொள்வது இவ்வமைப்பின் குறிக்கோளாக உள்ளது எனப் பாராட்டினார்.

மற்றவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வுடன் செயல்படுதல், புனித தலங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதிச்செய்தல், புனித தலங்களைச் சுற்றியுள்ள மதங்களுடன் இணக்கமாகச் செல்லல், நோயுற்றோர் மத்தியில் கருணையுடன் செயலாற்றுதல்  என நல்ல ஆயனாம் இயேசுவோடு ஒரு நல்ல சமாரியராக மால்ட்டா அமைப்பினர் செயல்படுவதை பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிறரன்புப் பணிகளை இயேசுவின் பெயரால் ஆற்றும் இவ்வமைப்பின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் தன் ஆசீரை வழங்குவதாகக் கூறி தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2023, 14:45