தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

அமைதியின் பாதை, ஒருமைப்பாட்டின் பாதையாகும்

ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ள ஓர் உலகில் நாம் வாழ்கிறோம், ஒவ்வொரு மனிதரின் செயல்பாடுகளும் மற்றவரைப் பாதிக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமைதியின் பாதை என்பது, ஒருமைப்பாட்டின் பாதை, ஏனெனில் எவரும் தனியாக மீட்படைய முடியாது என தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 9ஆம் தேதி திங்களன்று திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உலக அமைதி குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே கருத்தை மையமாக வைத்து தன் டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

அமைதியின் பாதை, ஒருமைப்பாட்டின் பாதையாகும், ஏனெனில் எவரும் தனியாக மீட்படைவதில்லை எனக்கூறும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ள ஓர் உலகில் நாம் வாழ்கிறோம், இறுதியில் ஒவ்வொரு மனிதரின் செயல்பாடுகளும் மற்றவரை பாதிக்கின்றன, என மேலும் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2023, 15:03