தேடுதல்

காங்கோ குடியரசு ஆயர்கள் காங்கோ குடியரசு ஆயர்கள்  (AFP or licensors)

காங்கோ குடியரசில் தலத்திருஅவை

1956 ஆம் ஆண்டு காங்கோ ஆயராக, பேரருள்திரு Pierre Kimbondo, மற்றும் 1959 ஆம் ஆண்டில், லியோபோல்ட்வில்லின் முதல் பேராயராக Joseph Malula, வும் நியமிக்கப்பட்டனர். இவரே Joseph Malula, பின்னாளில் நாட்டின் முதல் கர்தினாலாகவும் மாறினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

துணை-சஹாரா பகுதியில் உள்ள மிகப் பழமையான தலத்திருஅவைகளில் ஒன்றாக காங்கோ குடியரசின் தலத்திரு அவை (DRC), 1491ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் உருவானது. அவ்வாண்டில் காங்கோவின் மன்னர் Nzinga-a-Nkuwu (King João I) மற்றும் அவரது குடும்பத்தினர் போர்த்துகீசிய மறைப்பணியாளர்களால் மதமாற்றம் செய்யப்பட்டு திருமுழுக்கு பெற்றனர். காங்கோவை கத்தோலிக்க நாடாக மாற்ற பாடுபட்ட மன்னரின் மகன் Nzinga Mbemba ன்சிங்கா ம்பெம்பா (King Alfonso I) 1506 இல் அரியணை ஏறினார். 1596 இல் சாவோ சால்வடார் மறைமாவட்டம் (இப்போது Mbanza Kongo) அமைக்கப்பட்டது. இருப்பினும், மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் காங்கோ சமுதாயத்தில் கிறிஸ்தவம் வேரூன்றியது.

பெல்ஜிய ஆட்சியின் கீழ் காங்கோ தேவாலயம்

பெல்ஜியத்தின் அரசர் இரண்டாம் லியோபோல்ட் (1885-1960) ஆட்சியின் போது நாட்டின் பெல்ஜிய காலனித்துவ ஆட்சியின் போதும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் உறுதியாக நிறுவப்பட்டது. மேலும், வெள்ளை தந்தையர்கள் என்றும் அழைக்கப்படும் Scheut மறைப்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகளின் வருகையாலும் உறுதியான கிறிஸ்தவம், Spiritan அருள்பணியாளர்களால் மென்மேலும் வளர்ந்தது.

பெல்ஜிய ஆட்சியாளர்கள் கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு அங்கீகாரம் அளித்து தீவிரமாக ஆதரித்தனர். 1954 ஆம் ஆண்டில், காங்கோவின் முதல் பல்கலைக்கழகம், இயேசு சபை பல்கலைக்கழகம் "Lovanium",  லியோபோல்ட்வில் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டு தற்போது தற்போது கின்ஷாசா என்றழைக்கப்படும் இடத்தில் திறக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு காங்கோ ஆயராக, பேரருள்திரு Pierre Kimbondo, மற்றும் 1959 ஆம் ஆண்டில், லியோபோல்ட்வில்லின் முதல் பேராயராக Joseph Malula, வும் நியமிக்கப்பட்டனர். இவரே Joseph Malula, பின்னாளில் நாட்டின் முதல் கர்தினாலாகவும் மாறினார். 1930 ஆம் ஆண்டில், திருத்தந்தை 9ஆம் பயஸ் பெல்ஜிய காங்கோவிற்கு ஒரு அப்போஸ்தல தூதுக்குழுவை நிறுவினார், இது காங்கோவின் சுதந்திரத்திற்குப் பிறகு 1963 ஆம் ஆண்டு திருப்பீடத்தூதரகமாக உயர்த்தப்பட்டது.

மொபுடுவின் ஆட்சியின் கீழ் தேவாலயம்

கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தேசியமயமாக்கலை திணித்த சர்வாதிகாரி Mobutu Sese Seko  நீண்ட கால ஆட்சியின் போது, மாநிலத்திற்கும் தலத்திருஅவைக்கும் இடையிலான நல்ல உறவுகள் மோசமடையத் தொடங்கின. மொபுட்டுவின் சர்வாதிகார மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் காங்கோ ஆயர் பேரவைக்கு சிக்கல்களை ஏற்படுத்தியது. Mobutu பள்ளி தேசியமயமாக்கலில் பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகும், 1980 களின் முற்பகுதியில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் ஆப்ரிக்க நாட்டிற்கு மேற்கொண்ட இரண்டு அப்போஸ்தலிக்க பயணங்களுக்குப் பிறகும் தலத்திரு அவைகளுக்கு எதிரான பதட்டங்களும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்தன.

மொபுட்டு மன்னரின் மரணத்திற்குப் பிறகு 1990 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசுத்தலைவர் Laurent-Désiré Kabila ஆட்சிக் காலத்தில், காங்கோ மக்கள் மீது தொடரப்பட்ட ஊழல், வன்முறை மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக காங்கோ ஆயர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்தனர். Great Lakes பகுதியில் அநீதிகள் மற்றும் போர்த் திட்டங்களைக் கண்டித்ததற்காக, 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி Bukavu பேராயர் Christophe Munzihirwa படுகொலை செய்யப்பட்டார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2023, 14:37