உலகில் உள்ள அனைத்தும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மனித வாழ்வில் தொழிநுட்பங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் மனித நுண்ணறிவின் மதிப்பு மற்றும் ஆற்றலை நன்றாகவும் சிறப்பாகவும் புரிந்து கொள்ள உதவுகிறது என்றும் அதேவேளையில் படைப்பின் மீது நமக்கு இருக்கும் பெரிய பொறுப்பைப் பற்றி பேசுகிறது.என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்ரவரி 20, இத்திங்களன்று, திருப்பீட வாழ்வு கழகத்தின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் அதன் உறுப்பினர்களுக்கு உரை வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதரின் மாண்பு மற்றும், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான பணியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதை திருஅவை தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் தெரிவித்தார்.
தொழில்நுட்ப உலகில் மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், மனிதர் மற்றும் உறவு ஆகியவற்றின் வரையறையில் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கம், அறிவு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய மூன்றுவிதமான சவால்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொழில்நுட்ப உலகில் மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்
தொழில்நுட்ப உலகில் மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுச்சூழலை மாற்றி, வாழ்க்கை நிலைகளை மேம்படுத்தும் தொழில்நுட்ப வழியில் மனிதர் உலகில் செயல்படுவது சரியானது என்பதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தொழிநுட்ப மாற்றமானது, மனித நுண்ணறிவின் மதிப்பு மற்றும் ஆற்றலை நன்றாகவும் சிறப்பாகவும் புரிந்து கொள்ள உதவும் அதேவேளையில் படைப்பின் மீது நமக்கு இருக்கும் பெரிய பொறுப்பைப் பற்றியும் பேசுகிறது என்றும் கூறினார்
மனிதர் மற்றும் உறவு ஆகியவற்றின் வரையறையில் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கம்
மனிதர் மற்றும் உறவு ஆகியவற்றின் வரையறையில் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களின் நிலை குறித்து சிந்திக்க இந்த இரண்டாம் நிலை சவால் நம்மை அழைக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
பொதுவாக சமத்துவமின்மை குறைக்கப்பட்டு, குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், நோயாளர்கள் மற்றும் ஏழைகள் போன்ற மிகவும் பலவீனமானவர்களுக்குத் தேவையான ஆதரவு உத்தரவாதம் அளிக்கப்படும் வகையில், அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் வளங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான அவசரத் தேவையைப் பற்றி தான் இவ்விதத்தில் சிந்திப்பதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அறிவு என்ற கருத்து மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள்
இதுவரை கருத்தில் கொள்ளப்பட்ட கூறுகளின் தொகுப்பு, நாம் அறிவதற்கான வழிகளை கேள்விக்கு உட்படுத்துகிறது, ஏற்கனவே நாம் இயற்றும் பற்பல அறிவு தனக்குள்ளேயே தார்மீக தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்பதை மூன்றாவது சவாலாகப் பார்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்