தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

நாட்டின் தொண்டுப்பணிகளாற்றும் குழுக்களைச் சந்தித்த திருத்தந்தை

பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 11.00 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் நாட்டின் தொண்டுப்பணிகளாற்றும் குழுக்களை சந்தித்து மகிழ்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிப்ரவரி 1 புதன்கிழமை கின்ஷாசாவின் திருப்பீடத்தூதரகத்தில் சில தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் நடந்துகொண்டிருக்கும் வன்முறை மற்றும் அநீதியின் "சத்தத்திற்கு" மத்தியில் அமைதியாக வளர்ந்து பலனைத் தரும் காடு போன்றது அவர்களின் பணி என்றும் பாராட்டினார்.

ஆறு தொண்டு நிறுவனங்கள்

கூட்டத்தில் கலந்து கொண்ட ஆறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாட்டாளர்கள் மற்றும் பயனாளிகள் தங்கள் அனுபவங்களை விவரித்து, ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் மனித மேம்பாடு ஆகிய துறைகளில் தாங்கள் ஆற்றும் செயல்பாடுகளை முன்வைத்தனர். இதில் பல்வேறு வகையான உடல்குறைபாடுகள், ஹேன்சன் நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

தொண்டுப்பணியாற்றும் குழுவினர்
தொண்டுப்பணியாற்றும் குழுவினர்

புனித எஜிடியோ சமூகத்தின் கனவு மையம் அர்ஜென்டினாவை தளமாகக் கொண்ட மனிதாபிமான அமைப்பான ஃபாஸ்டா இயக்கம்,  உடல்ஊனமுற்றோரின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் "டெலிமா ஒங்கேங்கே  மற்றும் கிக்விட்டில் உள்ள மவாண்டா அன்னையின் ட்ரப்பிஸ்ட் அருள்சகோதரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஆக்கப்பூர்வமான பணிகளை ஆற்றும் அவர்களது தன்னலமற்ற சேவைஅயைப் பாராட்டி அவர்களுக்கு உரையாற்றினர் திருத்தந்தை பிரான்சிஸ்.

தொண்டு நிறுவனங்கள்  காங்கோ குடியரசு மற்றும் ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் நம்பிக்கையின் விதைகளை விதைக்கின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை கின்ஷாசாவில் உள்ள பல தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, காங்கோ ஜனநாயகக் குடியரசிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளை நிறைவு செய்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2023, 14:52