தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டோருக்காக வேண்டுவோம்

புனித Josephine Bakhita-வின் சான்று வாழ்வு கிறிஸ்தவ நம்பிக்கையில் நம்மை நிரப்புகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனித வர்த்தகத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம் என்றும், பல்வேறு வழிகளில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடனும், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுடனும் இணைந்து மனித மாண்பை மீட்டெடுப்பதில் உறுதியுடன் இருப்போம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 8, இப்புதனன்று, தான் வெளியிட்டுள்ள நான்கு குறுஞ்செய்திகளில், முதல் குறுஞ்செய்தியியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருடனும் இணைந்து மனித மாண்பை மீட்டெடுப்பதில் உறுதியுடன் இருப்போம் என்றும் கூறியுள்ளார்.

நீதி மற்றும் அமைதிக்காக வேண்டுவோம்

இன்று திருஅவை சூடான் நாட்டின் புனித Josephine Margaret Bakhita நினைவைக் கொண்டாடுகிறது. அவருடைய சான்று வாழ்வு நம்மை கிறிஸ்தவ நம்பிக்கையில் நிரப்புகிறது என்றும், அவரது பரிந்துரையில் நம்பிக்கை வைத்து, ஆப்பிரிக்காவில் உள்ள நமது சகோதரர் சகோதரிகளின் நீதி மற்றும் அமைதியின் எதிர்காலத்திற்காக  இறைவேண்டல் செய்வோம் என்று தனது முதல் டுவிட்டர் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்காக வேண்டுவோம்

நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக இறைவேண்டல் செய்வோம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிவாரண உதவிகளைக் கொண்டு வருவோர், ஒன்றிணைந்து செயல்பட அனைவரையும் ஊக்கப்படுத்துபவர்கள், மற்றும் மீட்புப் பணிகளில் உழைப்பவர்களுக்கு நன்றி கூறுகின்றேன் என்று தனது இரண்டாவது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மனித வர்த்தகத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்

மனித வர்த்தகத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம் என்றும், பாலியல் முறைகேடுகள், மற்றும் உழைப்புச் சுரண்டலின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடனும், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுடனும் இணைந்து மனித மாண்பை மீட்டெடுப்பதில் உறுதியுடன் இருப்போம் என்றும், மனித வர்த்தகத்திற்கு எதிராக இறைவேண்டல் செய்வோம் என்றும் தனது மூன்றாவது டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்காக வேண்டுவோம்

Chile நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவைகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வேண்டுவோம் என்று தான் வெளியிட்ட நான்காவது குறுஞ்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2023, 14:33