அமைதியில் கடவுளின் குரலைக் கேட்க வேண்டும் – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுள் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை மாறாக எப்போது அவரது உதவியை நாடுவோம் என்று ஆவலுடன் காத்திருக்கின்றார் என்றும், அமைதியில் இறைவனின் குரலைக் கேட்க வேண்டும் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 18 சனிக்கிழமை ஹாஸ்டாக் அமைதி என்ற தலைப்பில் தனது கருத்துக்களை இவ்வாறு பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் குரலை அமைதி செபத்திலும், அவருடனான நெருக்கமான உரையாடலிலும் நாம் கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடவுள் நம்மை ஒருபோதும் தனியாக விட்டுவிடுவதில்லை. அவரது உதவியை எப்போது கேட்போம் என்று ஆவலுடன் காத்திருக்கிறார். அமைதியான செபம் மற்றும் அவருடனான நெருக்கமான உரையாடல் வழியாக அவரது குரலைக் கேட்க முயற்சிக்க வேண்டும் அதுவே நமக்கு நன்மையையும் அமைதியையும் தரும் இதயத்தின் புதையலாக திகழும் என்பதே அக்குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்