திருத்தந்தையின் காங்கோ திருத்தூதுப் பயண மூன்றாம் நாள் நிகழ்வுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
2022 பிப்ரவரி 2ஆம் தேதி வியாழன் தனது 40ஆவது திருத்தூதுப் பயணத்திற்காக காங்கோ குடியரசில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கின்சாசா வில் உள்ள Notre-Dame du Congo என்னும் பேராலயத்தில் காங்கோ குடியரசில் உள்ள அருள்பணியாளர்கள் அருள்சகோதரிகள் திருத்தொண்டர்கள் மற்றும் அருள்பணித்துவ மாணவர்களுடனான வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார். கின்சாசா உள்ளூர் நேரம் மாலை 4.30 அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.00 மணிக்கு, அர்ப்பணிக்கப்பட்ட மக்களுக்கான உலக நாள் வழிபாட்டு நிகழ்வில் அவர்களுடன் இணைந்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 2ஆம் தேதி அர்ப்பணிக்கப்பட்ட மக்களுக்கான உலக நாளில் காலையில் கின்சாசா மறைசாட்சிகள் மைதானத்தில் இலட்சக்கணக்கான மக்களை சந்தித்து உரையாற்றியும் மாலையில் கின்சாசா பேராலயத்தில் அர்ப்பணிக்கப்பட்டவர்களுடனான வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டும் மகிழ்ந்த திருத்தந்தை தனது 40ஆவது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாளை நிறைவு செய்தார்.
Notre-Dame காங்கோ பேராலயம் கின்ஷாசாவின் பேராலயம் என்றும் அழைக்கப்படுகின்றது. 1947 ஆம் ஆண்டு பெல்ஜிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த இக்கட்டிடம், மன்னர் மொபுடுவின் ஆட்சியின் போது ஆலயம் அமைந்துள்ள பகுதியின் பெயரால் லிங்காவாலா அன்னை மரியா ஆலயம் என அழைக்கப்படலாயிற்று. சிலுவையில் தொங்கும் ஆப்ரிக்க இயேசுகிறிஸ்துவின் உருவச்சிலையை மையத்தில் கொண்ட ஆலயத்தின் உள்ளே, உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்தி மறைந்த ஆயர்களின் கல்லறைகளும் வெளியே அன்னை மரியாவின் சிறு கெபியும் உள்ளது. Notre-Dame பேராலயம் கின்ஷாசா பெருநகர உயர்மறைமாவட்டத்திற்குரிய இடமாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்