தேடுதல்

Palais de la Nation மாளிகை தோட்டத்தில் திருத்தந்தை Palais de la Nation மாளிகை தோட்டத்தில் திருத்தந்தை  (ANSA)

Palais de la Nation மாளிகையில் திருத்தந்தை

காங்கோ ஆற்றின் கரையில் கின்ஷாசாவின் வடக்கே உள்ள La Gombe வில் அமைந்துள்ளது Palais de la Nation அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.

அரசுத்தலைவர் சந்திப்பிற்குப் பின்  உள்ளூர் நேரம்  மாலை 5.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 10.00 மணிக்கு Palais de la Nation மாளிகை தோட்டப்பகுதியில் அரசு அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், அரசியல் தூதுவர்கள், தொழில்முனைவோர், என ஏறக்குறைய 1,000 பேரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அரசுத்தலைவரின் உரைக்குப் பின் திருத்தந்தை தனது 40 வது திருத்தூதுப் பயணத்தின் முதல் உரையை ஆற்றினார். 

Palais de la Nation

காங்கோ ஆற்றின் கரையில் கின்ஷாசாவின் வடக்கே உள்ள La Gombe அமைந்துள்ள Palais de la Nation அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். கின்ஷாசாவில் பெல்ஜிய கவர்னர் ஜெனரலின் இல்லமாக Marcel Lambrichs என்பவரின் வடிவமைப்பில் 1956 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு,  1961 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இங்குள்ள, பெரிய காங்கிரஸ் மண்டபத்தில்தான், பெல்ஜிய நாடாளுமன்றம், மன்னர் Baldovino முன்னிலையில், 1960 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்று காங்கோ குடியரசிற்கு சுதந்திரத்தை அறிவித்தது. காங்கோ குடியரசின் முதல் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Lumumba, காலனித்துவத்திற்கு எதிராக ஒரு சிறு உரையை நிகழ்த்தியதும் இங்கு தான். சுதந்திரத்திற்குப் பிறகு, மாளிகை சிறிதுகாலம் காங்கோ பாராளுமன்றத்தின் இடமாக இருந்தது. கட்டிடத்தின் வெளிப்புறத்தில், இரண்டு பக்கவாட்டு இறக்கைகள் ஒரு பரந்த வட்ட நுழைவாயிலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. அரண்மனை அமைந்துள்ள சதுக்கத்தில் லாரன்ட்-டிசிரே கபிலாவின் நினைவாக ஜனவரி 2001 மற்றும் ஜனவரி 2002 க்கு இடையில் ஜனாதிபதி Laurent-Désiré Kabila அவர்களின் கல்லறை உள்ளது.

அரசுத்தலைவர்களுடனான சந்திப்பை முடித்த பின்னர் திருத்தந்தை அங்கிருந்து 750 மீட்டர் தொலைவிலுள்ள திருப்பீடத்தூதரகத்திற்கு காரில் பயணமானார். உள்ளூர் நேரம் மாலை 6.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 10.30 மணிக்கு திருப்பீடத்தூதரகம் வந்தடைந்த திருத்தந்தையை இளையோர் காங்கோ குடியரசுப் பாடல்களை இசைத்தும் பாடியும் மகிழ்ந்து வரவேற்றனர். இரவு உணவை முடித்து நித்திரைக்குச் செல்லும் திருத்தந்தை இத்துடன் தன்னுடைய முதல் நாள் பயணத்தை நிறைவு செய்கின்றார். 6 நாட்கள் கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தில் 10 உரைகளையும் 2 மறையுரைகளையும் ஆற்ற உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதல் நாளினை சிறப்பாக நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2023, 14:20