திருத்தந்தை பிரான்சிஸ் –தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவு 2021
உடன்பிறந்த உறவு நிலை
சகோதரக் கொலைகளை விட நீடித்து நிலைக்கக் கூடியது என்ற
நம்பிக்கையை நாம் மீண்டும் உறுதிப்படுத்துவோம்
வெறுப்பை விட நம்பிக்கை வலிமையானது,
போரை விட அமைதி சக்தி வாய்ந்தது.
இந்த தொற்றுநோய் காலத்தில் மிகவும் துன்பகரமான
நிலைக்கு உள்ளாக்கப்பட்ட நாம்,
உலகெங்கிலும் உள்ள அனைத்து தலத்திருஅவைகளுடன்
நாம் செபத்தால் இணைந்து
நம் புனித அன்னையின் கைகளில் மனித இனம்
அனைத்தையும், ஒப்படைப்போம்.
குறைவான ஆயுதங்கள் மற்றும் அதிக உணவு,
குறைவான பொய்மைத்தன்மை மற்றும் அதிக வெளிப்படைத்தன்மை,
தடுப்பூசிகள் நியாயமான முறையில் விநியோகிக்கப்படுதல்,
ஆயுதங்கள் கண்மூடித்தனமாக சந்தைப்படுத்தலைக் குறைத்தல்
என்ற நிலை வேண்டும்.
மத்திய தரைக்கடல் இப்போது கல்லால் கட்டப்படாத கல்லறைகளின்
கல்லறைத் தோட்டமாக மாறி வருகிறது.
நாகரீகம், இந்த படகு விபத்துக்களில் அழிவதை தடுத்து நிறுத்துவோம்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்