தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் புனித பேதுரு பெருங்கோவில்  

திருத்தந்தை புதுப்பித்துள்ள 'C9' கர்தினால்கள் ஆலோசனை அவை

உலகளாவிய திருஅவையின் நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு உதவுவதற்காக 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி கர்தினால்கள் ஆலோசனை அவை உருவாக்கப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முந்தைய கர்தினால்கள் அவையின் ஆணையுரிமை காலக்கெடு முடிந்த நிலையில், ஆயர் Marco Mellino  அவர்களை செயலராகக் கொண்ட 'C9' எனப்படும் திருத்தந்தைக்கான கர்தினால்கள் ஆலோசனை அவையைப் புதுப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தைக்கான முந்தைய கர்தினால்கள் ஆலோசனை அவையின் கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது என்றும், 'C9' புதிய கர்தினால்கள் அவையின் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காலை திருத்தந்தையின் இல்லமான சாந்தா மார்த்தாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலகளாவிய திருஅவையின் நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு உதவுவதற்காக 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இந்தக் கர்தினால்கள் ஆலோசனை அவை உருவாக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது.

உரோமன் தலைமைச் செயலகத்தில் மாற்றங்களைக் கொணரும் விதத்தில்  நிறுவப்பட்ட இந்தக் கர்தினால்கள் ஆலோசனை அவை, கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட புதிய அப்போஸ்தலிக்க அமைப்புமுறைச் சட்டமான Praedicate Evangelium-ன் வழியில் அதன் திட்டச் செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால்கள் Pietro Parolin, Fernando Vérgez Alzaga, Fridolin Ambongo, Oswald Gracias, Seán Patrick O'Malley, Juan José Omella, Gérald Lacroix, Jean-Claude Hollerich, Sérgio da Rocha ஆகியோர் புதிய கர்தினால்கள் ஆலோசனை அவையின் உறுப்பினர்கள் ஆவர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2023, 13:10