தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

தவக்காலப் பாதையில் இறைவேண்டல், உண்ணா நோன்பு, இரக்கம்

இறைவேண்டல், உண்ணா நோன்பு, இரக்கத்தின் செயல்கள் போன்றவை வழியாக, நம் இதயங்களின் தூசிகளை அகற்றவேண்டியத் தேவை உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இறைவேண்டல், உண்ணா நோன்பு,  இரக்கத்தின் செயல்களை ஆற்றுதல் ஆகியவையே தவக்காலப்பாதை என மார்ச் 27, திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் இதயங்களைக் கறைப்படுத்தியிருக்கும் அனைத்துத் தூசிகளையும் அகற்றவேண்டிய தேவை உள்ளது. எப்படியெனில், இறைவேண்டல், உண்ணா நோன்பு, இரக்கத்தின் செயல்கள் போன்றவை வழியாகவே. ஏனெனில், இது தவக்காலப் பாதை என தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

2012ஆம் ஆண்டு திருத்தந்தையர்களின் டுவிட்டர் பக்கம் துவக்கப்பட்டதிலிருந்து, ஆங்கிலப்பக்கத்தில் மட்டும் இதுவரை 4,760 டுவிட்டர் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கிலப் பக்கத்தை பார்வையிட்டு பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 88 இலட்சமாக உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2023, 15:10