தேடுதல்

கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அன்னை மரியாவின் ஆகட்டும்

வரலாற்றில் மிக முக்கியமானதாக, அகந்தை மற்றும் பெருமையால் வந்த இல்லை என்னும் பழைய ஏற்பாட்டின், பாவத்தைத் தவிர்ப்பதாக, அன்னை மரியாவின் தாழ்ச்சி நிறைந்த ஆகட்டும் இருந்தது

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்னை மரியாவின் 'ஆகட்டும்' என்ற வார்த்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, தாழ்ச்சியானது என்றும், அமைதிக்கான முயற்சிகளில் சோர்வடையாது அமைதியின் அரசியாம் அன்னை மரியாவிடம் அதனை ஒப்படைத்து வாழ வேண்டும் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 25, சனிக்கிழமையன்று, கிறிஸ்து பிறப்பு அறிவிப்புப் பெருவிழாவைத் திருஅவை சிறப்பிக்கும் வேளையில், அன்னை மரியாவின் தாழ்ச்சியான 'ஆகட்டும்' என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டின் இல்லை என்ற கீழ்ப்படியாமையைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது என்ற கருத்தை வலியுறுத்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நாளன்று அன்னை மரியா கூறிய 'ஆகட்டும்' என்ற  வார்த்தையால் கடவுள் நம்மிடையே குடிகொள்ள வந்தார். வரலாற்றில் மிக முக்கியமானதாக, அகந்தை பெருமையால் வந்த இல்லை என்னும் பழைய ஏற்பாட்டின், பாவத்தைத் தவிர்ப்பதாக, அன்னை மரியாவின் தாழ்ச்சி நிறைந்த 'ஆகட்டும்' என்ற வார்த்தை இருந்தது எனவும், கீழ்ப்படியாமையைக் குணப்படுத்தி பாவத்தின் அகங்காரத்தை முறியடிக்கும் விருப்பமாக அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் தனது இரண்டாவது டுவிட்டர் குறுஞ்செய்தியில் கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று, அனைத்து ஆயர்களுடனும் ஒன்றிணைந்து, திருஅவை, மனிதகுலம், குறிப்பாக இரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகியவற்றை அன்னை மரியாவின் மாசற்ற திருஇதயத்திற்கு அர்ப்பணித்ததை  நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்கான முயற்சிகளில் சோர்வடையாது அதனை அமைதியின் அரசியாம் அன்னை மரியாவிடம் ஒப்படைத்து வாழவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2023, 13:18