தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் புனித பேதுரு பெருங்கோவில்  

'MOTU PROPRIO-வின் அடிப்படையில் திருத்தந்தையின் திருமடல்

2023-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி, பாஸ்கா கால ஐந்தாவது ஞாயிறு அன்று இம்மாற்றம் நடைமுறைக்கு வருகிறது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அர்ப்பண வாழ்வில் பதவி நீக்கம் செய்யப்பட்ட துறவு சபை உறுப்பினரின் (அருள்பணியாளரின்) விதிமுறைகள் மாற்றியமைக்கப்படுவது பற்றிய 'MOTU PROPRIO-வின் அடிப்படையில் திருத்தந்தையின் திருமடல் ஏப்ரல் 3, இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது ஆறாவது பொதுக் கோட்பாடாகும் என்றும், இது அக்டோபர் 1967-இல் நிகழ்ந்த ஆயர் மாமன்றத்தின் திருஅவைச் சட்டத்தின் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது மற்றும் அகநிலை உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் திருஅவையின்  சட்ட ஒழுங்கில் ஒரு சிறப்புரிமையை அங்கீகரித்தது ஆகியவை இன்றும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருஅவைச் சட்டம் 501, § 2 CCEO-வின் படி, பதவி நீக்கம் செய்யப்பட்ட துறவு சபை உறுப்பினர் தகுதியான அதிகாரியிடம் மேல்முறையீடு செய்வதற்கான உரிமையைப் பற்றி, 'பதினைந்து நாட்கள்' என்ற வார்த்தை 'முப்பது நாட்கள்' என மாற்றப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளது.

'MOTU PROPRIO வடிவில் உள்ள இந்த திருமடலில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்றால், இது சிறைப்பாகக் குறிப்பிடத் தகுதியுடையதாக இருந்தாலும், L’Osservatore Romano-வில் வெளியிடுவதன் வழியாக முறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தான் ஆணை பிறப்பிப்பதாகவும், 2023-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி, பாஸ்கா கால ஐந்தாவது ஞாயிறு அன்று இது நடைமுறைக்கு வருகிறது என்றும்,  பின்னர் Acta Apostolicae Sedis-இல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2023, 14:53