அரசுத்தலைவர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச்செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஹங்கேரிக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லாவிற்கு தனது பயணம் பற்றிய தந்திச் செய்தியினை அனுப்பியுள்ளார். அதில் திருத்தூதுப் பயணத்திற்காக இத்தாலியிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும், நம்பிக்கைக் கொண்ட சகோதரர்களைச் சந்திக்க வேண்டும் மனிதர்களுக்கிடயே உறவுப்பாலம் அமைக்கவேண்டும் என்ற விருப்பத்தால், இப்பயணம் செயல்படுத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தாலியர்கள் அனைவருக்கும் தனது அன்பான வாழ்த்துகளையும், நாட்டின் நலனுக்கான தனது செபங்களையும் அச்செய்தியில் தெரியப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், குரோஷியா குடியரசுத் தலைவர் ZORAN MILANOVIĆ அவர்களுக்கும் தனது வாழ்த்துச் செய்தியினையும் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்செய்தியில் எல்லாம் வல்ல இறைவன் குரோஸியா நாட்டு மக்களுக்கு உடன்பிறந்த உறவு, மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கான பரிசினைத் தர செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த நாடான ஹங்கேரிக்கு தான் பயணியாகவும் நண்பராகவும் வருவதாகவும், பாலங்கள் மற்றும் புனிதர்களின் நகரமான புடாபெஸ்டில் இருந்து, ஐரோப்பா முழுவதையும் நினைத்து, ஒற்றுமை, ஒருங்கிணைப்புடன் அமைதியின் வீடாகவும், வரவேற்பின் அடையாளமாகவும் மக்கள் அனைவரும் இருக்க தான் தொடர்ந்து செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் உட்பட பத்திரைக்கையாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு பணியாளர்கள் ஏறக்குறைய 75 பேர் உடன் பயணித்தனர்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்