தேடுதல்

போர் ஆயுதங்கள் உக்ரைன் போர் ஆயுதங்கள் உக்ரைன்   (AFP or licensors)

மோதல்களுக்குத் தீர்வாக ஆயுதப் பயன்பாடு, பலவீனம்

பேச்சுவார்த்தை நடத்துவது, நடுநிலை இணக்குவிப்பு, ஒப்புரவை துவக்குதல் போன்றவைகளுக்கு உண்மையில் மனதைரியம் தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மோதல்களுக்குத் தீர்வுகாண ஆயுதங்களைப் பயன்படுத்துவது பலவீனம் மற்றும் எளிதில் நொறுங்கும் தன்மையின் அடையாளமாக உள்ளது என தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதி என்ற ஹேஷ்டாக்குடன் ஏப்ரல் 24, திங்கள்கிழமையன்று டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேச்சுவார்த்தை நடத்துவது, நடுநிலை இணக்குவிப்பு, ஒப்புரவை துவக்குதல் போன்றவைகளுக்கு உண்மையில் மனதைரியம் தேவை என மேலும் அதில் கூறியுள்ளார்.

மோதல்களுக்குத் தீர்வுகாணும் நோக்கத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது பலவீனத்தின் அடையாளம் எனக்கூறும் திருத்தந்தை, அதேவேளை, பேச்சுவார்த்தைகளையும் ஒப்புரவுப் பணிகளையும் துவக்குவதற்கு மனவுறுதி தேவை எனவும் தன் திங்கள் தின டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2023, 13:40