தேடுதல்

திருத்தந்தையைச் சந்திக்கும் பேராயர் Anthony திருத்தந்தையைச் சந்திக்கும் பேராயர் Anthony   (AFP or licensors)

மாஸ்கோ பேராயர் அந்தோனியை சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்தச் சந்திப்புகளின்பொது வழக்கமாக செய்வதுபோல், ஆர்த்தடாக்ஸ் பேராயர்கள் அணியும் இறைவனின் அன்னை சின்னத்துடன் கூடிய பதக்கமான பனாஜியாவை (panagia) முத்தமிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இரஷ்ய ஆர்தடாக்ஸ் கிறித்தவ சபையின் வெளியுறவு துறையின் தலைவரான பேராயர் அந்தோனி அவர்கள், மே 3, இப்புதனன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற புதன் பொதுமறைக்கல்வி  உரையில் கலந்துகொண்டார்.

இப்புதன் பொதுமறைக்கல்வி உரையின்போது திருப்பீடத் துறையின் திருநிலையினர் குழாமின் தலைவர் கர்தினால் Lazarus You Heung-sik-இன் அருகில் அமர்ந்திருந்த பேராயர் அந்தோனி அவர்கள், உரையின் முடிவில் திருத்தந்தையை சந்தித்து வாழ்த்தினார்.

இந்தச் சந்திப்புகளின்பொது வழக்கமாக செய்வதுபோல், ஆர்த்தடாக்ஸ் பேராயர்கள் அணியும் இறைவனின் அன்னை சின்னத்துடன் கூடிய பதக்கமான பனாஜியாவை (panagia) முத்தமிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பிறகு பேராயர் அதோனிக்கு பாப்பிறை பதக்கத்தை வழங்கினார். பதிலுக்குப் பேராயர் அந்தோனியும் திருத்தந்தைக்குப் பனாஜியாவை வழங்கினார்.

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை Kirill ஆசீருடன் மே 1, இத்திங்களன்று, உரோமை வந்தடைந்த பேராயர் அந்தோனி, மே 2, இச்செவ்வாயன்று, உரோமையில் உள்ள கிழக்கு ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின்  திருப்பீடத் துறையின் தலைவர் பேராயர் Claudio Gugerottiயைச் சந்தித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2023, 15:08