தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

மத்திய கிழக்கில் நிலையான போர் நிறுத்தம் வேண்டும் – திருத்தந்தை

மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் நிலையானதாக இருக்க வேண்டும், ஆயுதங்கள் வழியாகப் பாதுகாப்பைப் பெற முடியாது

 

மெரினா ராஜ் -  வத்திக்கான்

இஸ்ரயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும், ஆயுதங்களால் எல்லா நம்பிக்கைகளும் அழிக்கப்படுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 14 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானின்  புனித பேதுரு பெருங்கொவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய அல்லேலுயா வாழ்த்தொலிக்குப் பின்பு இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலையான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

உலகம் முழுவதும் அன்னையர் தினத்தைக் கொண்டாடி மகிழும் வேளையில் போரினால் ஏராளமான பெண்கள் துன்புறுவதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் நடக்கும் ஆயுதம் ஏந்திய மோதல்களினால் பெண்கள் சிறார் உட்பட அப்பாவி மக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதையும் நினைவுகூர்ந்தார்.

ஆயுதங்களால் ஒருபோதும் பாதுகாப்பையும் நிலைததன்மையையும் அடைய முடியாது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தகைய போரினால் அமைதிக்கான எல்லா நம்பிக்கையும் தொடர்ந்து அழிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் இரஷ்யா உக்ரைன் போரை நினவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரைனின் துன்பத்தைத் தணிக்கவும் போரினால் இறந்த அனைத்து அன்னையர்களின் ஆன்மா இறைவனின் நிறையமைதி பெறவும், போர்களாலும் வன்முறைகளாலும் காயமடைந்த அனைத்து நாடுகளின் துன்பத்தைப் போக்கவும் அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2023, 15:01