தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

மரியாவிடமிருந்து நம்பிக்கையின் கொடையைப் பெற்றுக்கொள்வோம்!

"ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்று எலிசபெத் அன்னை மரியாவைப் பார்த்து கூறுமளவிற்கு அவர் கடவுளுடைய வார்த்தைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இன்று, அன்னையாம் திருஅவை, புனித கன்னி மரியா, எலிசபெத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது என்றும், கடவுளுடைய வார்த்தையை நம்பி செயல்பட்ட அவரிடமிருந்து நம்பிக்கையின் கொடையைப் பெற்றுக்கொள்ளுங்கள என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 31, இப்புதனன்று, வெளியிட்டுள்ள தனது முதல் குறுஞ்செய்தியில் இவ்வாறு விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்ஸ் அவர்கள், "ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்”  (லூக் 1:45) என்று எலிசபெத் அன்னை மரியாவைப் பார்த்து கூறுமளவிற்கு அவர் கடவுளுடைய வார்த்தைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்றும் உரைத்துள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக செபம்

மே மாதத்தின் கடைசி நாளான இன்று, அதாவது, புனித கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்த இந்நாளிலே, வரவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக உலகம் முழுவதும் உள்ள அன்னை மரியாவின் ஆலயங்களில் இறைவேண்டல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாமன்றத்தின் முக்கியமான கட்டத்தை புனித கன்னி மரியா தனது தாய்வழி பாதுகாப்போடு வழிநடத்துமாறு அவரிடம் கேட்டுக்கொள்வோம் என்றும் தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் கூறியுளளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2023, 12:43