தேடுதல்

செபமாலை செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2021) செபமாலை செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2021)  (AFP or licensors)

தலைவர்கள் மக்களின் விருப்பத்திற்கு செவிமடுக்க செபிப்போம்

அருள்நிறைந்த அன்னை மரியாவிடம், போரினால் துயருறும் உக்ரைன் மக்களுக்காக அமைதியைக் கொடையாகக் கேட்டு செபமாலை செபிப்போம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

 

அமைதியை விரும்பும் துன்புறும் மக்களின் குரலுக்கு நாடுகளின் தலைவர்கள் செவிசாய்க்க அமைதியின் அரசியாம் அன்னை மரியாவிடம் வேண்டுவோம் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 8 திங்கள்கிழமையன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு தன் கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னையின் வணக்க மாதமாகிய இம்மேமாதத்தில் செபமாலை செபிப்பதையும் அக்குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

அன்னைக்கு சிறப்பு வணக்கம் செலுத்தும் இம்மேமாதத்தில் செபமாலை செபித்து,  அருள்நிறைந்த அன்னை மரியாவிடம், அமைதியைக் கொடையாகக் கேட்டுப்பெறுவோம் குறிப்பாக போரினால் துயருறும் உக்ரைன் மக்களுக்காகவும், அமைதியை விரும்பும் அம்மக்களின் விருப்பத்திற்கு நாட்டின் தலைவர்கள் செவிமடுக்கவும் சிறப்பாக செபிப்போம் என்பதே அக்குறுஞ்செய்தி உணர்த்துவதாகும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2023, 13:03