தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

வாழ்க்கை என்பது நம்மை அன்பு செய்பவரை நோக்கிய பயணம்

இறைவன் மீது நமது பார்வையை நிலைநிறுத்துவதன் வழியாகப் புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியுடன் நிலைத்திருக்கும் வலிமையைக் கண்டடைகின்றோம் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

வாழ்க்கை என்பது நம் திறமைகளைக் காட்டுவது அல்ல, மாறாக நம்மை அன்பு செய்பவரை நோக்கியப் பயணம் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 09 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு தன் கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் மீது நமது பார்வையைப் பதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நமது திறமைகளை மற்றவர்களுக்குக் காட்டுவதல்ல வாழ்க்கை மாறாக நம்மை அன்பு செய்பவரை நோக்கியப் பயணமே வாழ்க்கை என்றும், இறைவன் மீது நமது பார்வையை நிலைநிறுத்துவதன் வழியாகப் புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியுடன் நிலைத்திருக்கும் வலிமையைக் கண்டடைகின்றோம் என்றும் அக்குறுஞ்செய்தியில்  சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2023, 13:47