குடும்ப செபமாலை நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் ஊற்று
மெரினா ராஜ் - வத்திக்கான்
அன்னையின் வணக்கமாதமாகிய இம்மேமாதத்தில் தினந்தோறும் குடும்பத்தில் செபமாலை செபிப்பதனால் நம்பிக்கை மகிழ்ச்சி ஆகியவை ஒருபோதும் வெளியேறாது என்று வலியுறுத்தி நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் ஊற்று குடும்ப செபமாலை என்ற மையக்கருத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 6 சனிக்கிழமை குடும்பத்தில் செபமாலை செபிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி ஹேஸ்டாக் புனித செபமாலை என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்றாடம் குடும்பத்தில் செபமாலை செபிப்பதனால் நம்பிக்கை, மகிழ்ச்சி என்பவை வெளியேறாது, மாறாக கடவுளோடு ஒன்றிணைந்து இருப்பவரின் வாழ்வில் இருந்து அந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வெளிப்படும் என்பதே திருத்தந்தை அக்குறுஞ்செய்தி வழியாக உணர்த்துவதாகும்.
திருத்தந்தையின் மே மாத திருவழிபாட்டு நிகழ்வுகள்
மே மாதம் திருத்தந்தை தலைமையில் நடைபெற உள்ள திருப்பலியின் விவரங்களில் மே 28 ஞாயிற்றுக்கிழமை பெந்தேகோஸ்து பெருவிழா திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் உரோம் உள்ளூர் நேரம் காலை 10.00 மணிக்கு நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்