தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்  

திருஅவை ஒரு இளைஞனின் வலிமையைக் கொண்டுள்ளது

இளையோரே, உங்கள் தாத்தா பாட்டியுடன் கொஞ்சம் பேசுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு ஞானத்தைத் தருவார்கள், அதனால் நீங்கள் எப்போதும் முன்னேறுவீர்கள் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலக இளையோர் தினத்திற்கு நன்கு தயார் செய்யவேண்டுமெனில், நீங்கள் அதன் தோற்றுவாயைப் பார்க்க வேண்டும், பெரியவர்களைச் சந்திக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர்த்துக்கல நாட்டின் தலைநகர் லிஸ்பனில் இவ்வாண்டு ஆகஸ்ட் 01 முதல் 06 வரை நிகழவிருக்கும் உலக இளைஞர் தினம் குறித்து, மே 3, இப்புதனன்று அனுப்பியுள்ள காணொளிக்காட்சி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த இளையோர் தினத்தில் பங்கேற்பது ஒரு அழகான விடயம், அதை ஒருவர் உணரும்போது, ​​அதில் பங்கேற்பதன் மகிழ்ச்சியை உணர்கிறார் என்றும், இந்த மகிழ்ச்சியுடன் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள், அதில் நம்பிக்கை வையுங்கள் , ஏனென்றால் இதுபோன்ற ஒரு நாளில் நீங்கள் வளர்ச்சிபெறுவதற்கான அதிகமான காரியங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாளுக்காக நீங்கள் நன்கு தயார் செய்ய வேண்டுமெனில் நீங்கள் அதன் தோற்றுவாயைப் (root) பார்க்க வேண்டும், பெரியவர்களைச் சந்திக்க முயற்சிக்க வேண்டும், அவர்களிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் தாத்தா பாட்டியுடன் கொஞ்சம் பேசுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு ஞானத்தைத் தருவார்கள், அதனால் நீங்கள் எப்போதும் முன்னேறுவீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2023, 14:34