தேடுதல்

ஏப்ரல் 2023-இல் நடைபெற்ற கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம் ஏப்ரல் 2023-இல் நடைபெற்ற கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம்   (© Vatican Media)

திருத்தந்தையுடன் உரையாடிய கர்தினால்கள் ஆலோசனை அவை

திருஅவையின் வாழ்வுமுறை குறித்தும், உக்ரனில் நிகழ்ந்துவரும் போர் குறித்தும் திருத்தந்தை கர்தினால்கள் ஆலோசனை அவையுடன் உரையாடினார் திருத்தந்தை : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நற்செய்தியை அறிவித்தல் எனப் பொருள்படும் ‘Praedicate evangelium’ என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தை மறைமாவட்ட அளவில் செயல்படுத்துதல், வரவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத் திட்டத் தயாரிப்புகள், உரிமை வயதற்றவர்களைப் (Minor) பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் உக்ரைனில் நடந்து வரும் போர் குறித்து கர்தினால்கள் ஆலோசனை அவையில் கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 27, இச்செவ்வாயன்று, திருப்பீடச் செய்தித்தொடர்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி கர்தினால் Gianfranco Ghirlanda  அவர்கள், மறைமாவட்டத் தலைமைச் செயலகங்களுக்குள் நற்செய்தியை அறிவித்தல் எனப் பொருள்படும் ‘Praedicate evangelium’ என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தை எப்படி செயல்படுத்துவது என்ற தலையிப்பில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குத் தலைமைத் தாங்கினார் என்று தெரிவித்துள்ளது.

ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கர்தினால்கள் ஆலோசனா அவையின் செயலர் ஆயர் Marco Mellino அவர்களுடன் அனைத்து கர்தினால்களும் கலந்துகொண்டனர் என்று திருப்பீடச் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

இந்தக் கலந்துரையால் கூட்டமானது, மறைமாவட்டத் தலைமைச் செயலகங்களைத் திருஅவைச் சட்ட அமைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது அச்செய்தித் தொடர்பகம்.

வரும் அக்டோபர் மாதம், ‘ஒன்றிணைந்த பயணம்’ என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் 16-வது உலக ஆயர்கள் மாமன்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும், இதுகுறித்த தரவுகளையும் செயல்பாடுகளையும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரேக் (Mario Grech)  அவர்கள் இவ்வவையில் பகிர்ந்துகொண்டார் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

உக்ரைனில் நிகழ்ந்து வரும் மோதல்கள் குறித்தும் கர்தினால்கள் ஆலோசனை அவை கலந்துரையாட நேரம் ஒதுக்கியது என்றும், இவ்வவையின் அடுத்தக் கூட்டம் இவ்வாண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும் அவ்வறிக்கைக் கூறுகிறது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2023, 14:57