தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் உடன் கர்தினால் மர்செல்லோ செமராரோ (கோப்புப்படம் 2018) திருத்தந்தை பிரான்சிஸ் உடன் கர்தினால் மர்செல்லோ செமராரோ (கோப்புப்படம் 2018) 

தாமஸ் அக்குவினாஸ் புனிதராக அறிவிக்கப்பட்டு 700 ஆண்டுகள்

தொமினிக்கன் சபை துறவியான புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்கள், ஒரு பெரிய தத்துவஞானியாகவும், இறையியல் வல்லுநராகவும் அறியப்படுகிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித தாமஸ் அக்குவினாஸ் திருஅவையில் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 700ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கு கர்தினால் மர்செல்லோ செமராரோ அவர்களை தன் பிரதிநிதியாக அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி இத்தாலியின் Fossanova துறவுமடத்தில் இடம்பெற உள்ள இந்த 700வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாக, புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் செமராரோ கலந்துகொள்கிறார்.

இத்தாலியின் Roccasecca என்னுமிடத்தில் 1225ஆம் ஆண்டு பிறந்து தொமினிக்கன் சபை துறவியான புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்கள், ஒரு பெரிய தத்துவஞானியாகவும், இறையியல் வல்லுநராகவும் அறியப்படுகிறார்.

இத்தாலியின் Fossanova துறவு மடத்தில் 1274ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இறைபதம் சேர்ந்த இவரை, 1323ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி திருத்தந்தை 22ஆம் யோவான் புனிதராக அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2023, 14:12