ஆகஸ்ட் மாத இறுதியில் மங்கோலியாவிற்கு திருத்தூதுப் பயணம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மங்கோலிய அரசுத்தலைவர் மற்றும் அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் மங்கோலியாவிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயு புரூனி.
ஜீன் 3 சனிக்கிழமை திருத்தந்தையின் ஆகஸ்ட் மாத பயணத்திட்டம் பற்றிய செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயு புரூனி அவர்கள், இப்பயணம் பற்றிய பிற செய்திகள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 31 வியாழன் முதல் செப்டம்பர் 4 திங்கள் கிழமை வரை மங்கோலியாவுக்கு திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் போர்த்துக்கல்லில் உள்ள பாத்திமா அன்னை ஆலயம் செல்ல இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
ஜூன் 3 சனிக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தந்தையில் டுவிட்டர் குறுஞ்செய்தியானது, செபம் என்பது ஆவியானவரால் நிறைந்த கிறிஸ்து வழியாக தந்தைக் கடவுளோடு நாம் செய்யும் உரையாடலுக்கான இடம் என்று வலியுறுத்துகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்