தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பிரேசில் அரசுத்தலைவர் Lula da Silva திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பிரேசில் அரசுத்தலைவர் Lula da Silva   (AFP or licensors)

உக்ரைனில் அமைதியை ஊக்குவித்து வரும் திருத்தந்தைக்கு நன்றி

உலகின் சுயநல சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளான அமேசான் படுகையைப் பாதுகாப்பதில் பிரேசிலில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவைக் காட்டிய அர்ப்பணிப்புக்கு நன்றி : பிரேசில் அரசுத்தலைவர் Lula da Silva

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் பிரேசில் அரசுத்தலைவர் Lula da Silva அவர்களும் உக்ரைனில் அமைதி, வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

மே 31, இப்பதனன்று நிகழ்ந்த இந்தத் தொலைபேசி உரையாடலில் தங்கள் நாட்டிற்கு மீண்டும் வருமாறு பிரேசில் நாட்டு அரசுத் தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

உக்ரைன் மீதான இரஷ்யாவின் போரை அமைதியான முறையில் முடிப்பதற்கு பிரேசில் உட்பட நாடுகளின் குழுவிற்கான தனது திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்திய Lula da Silva அவர்கள், பெரும் உயிரிழப்புகளையும், கொடுந்துயர்களையும் அனுபவித்து வரும் அந்நாட்டில் அமைதியை ஊக்குவித்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் வறுமைக்கு எதிரான திருத்தந்தையின் போராட்டத்திற்கும், உலகின் சுயநல சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளான அமேசான் படுகையைப் பாதுகாப்பதில் பிரேசிலில் உள்ள கத்தோலிக்கத் திருஅவைக் காட்டிய அர்ப்பணிப்புக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இந்த்த தொலைபேசி உரையாடலின்போது நன்றி கூறியுள்ளார் Lula da Silva.

பிரேசில் நாட்டின் மீது காட்டிவரும் ஒன்றிப்பிற்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்த Lula da Silva. அவர்கள், அந்நாட்டில் நிலவிவரும் வறுமை மற்றும் பசிக்கு எதிரான போரை புதுப்பிக்கும் முயற்சி குறித்தும் திருத்தந்தையுடன் விவாதித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2023, 13:54