அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 7 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு குடல்வால் இறக்க பிரச்சனை காரணமாக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் திருப்பீடத்தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி.
சப்-ஆக்லூசிவ் சிண்ட்ரோம்களை உண்டாக்கும், ஹெர்னியா குடலிறக்கத்தின் காரணமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடல் அறுவை சிகிச்சை மற்றும் வயிற்றுச்சுவரின் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் வலி காரணமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மருத்துவக் குழுவின் பரிந்துரையின் பேரில் அறுவைசிகிச்சையானது இன்று ஜூன் 7 புதன்கிழமை பிற்பகலில் நடைபெறும் என்றும் தெரிவித்தார் புரூனி
இரண்டு மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏப்ரல் 1ஆம் தேதி வத்திக்கான் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 6 செவ்வாய்க்கிழமை மறு பரிசோதனைக்காக மீண்டும் ஜெமெல்லி மருத்துவமனை சென்று திரும்பினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்