பாகிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு திருப்பீடத்தூதர் நியமனம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஐவரி கோஸ்ட், பாகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு திருப்பீடத்தூதர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 16 வெள்ளிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறிய நிகழ்வின் போது இதனை அறிவித்தார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.
கஜகஸ்தான் நாட்டின் திருப்பீடத்தூதராக George Panamthundil அவர்களையும், பாகிஸ்தானின் திருப்பீடத்தூதராக பேரருள்திரு Germano Penemote அவர்களையும், ஐவரி கோஸ்ட் திருப்பீடத்தூதராக பேரருள்திரு Rueda Beltz அவர்களையும் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கஜகஸ்தான் நாட்டின் திருப்பீடத்தூதர்
கஜகஸ்தானின் திருப்பீடத்தூதராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு George Panamthundil அவர்கள் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் 1972ஆம் ஆண்டு பிறந்தார். 1998ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவுபெற்ற இவர், கீழைரீதிக்கான திருஅவைச் சட்டங்களில் பட்டம் பெற்றவர். 2005ஆம் ஆண்டு முதல் திருப்பீடத்தில் பணியாற்றி வரும் இவர் Costa Rica, Guinea, Iraq, Austria, Israele, மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள திருப்பீடத்தூதரகக் குழுவில் பணியாற்றியுள்ளார். மேலும், சிப்ரோவின் திருப்பீட பிரதிநிதியாகவும் உள்ள பேரருள்திரு George Panamthundil அவர்கள், பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலியன், ஸ்பானியம், ஜெர்மன் மொழிகளும் அறிந்தவர்.
பாகிஸ்தான் திருப்பீடத்தூதர்
பாகிஸ்தான் நாட்டின் திருப்பீடத்தூதராக நியமிக்கப்பட்டுள்ள 53 வயதான ஆப்ரிக்க அருள்பணியாளர் Germano Penemote அவர்கள், திருப்பீடத்தூதரகத்தின் ஆலோசகராக பணியாற்றியவர். இவர் தென் ஆப்ரிக்காவின் Angola வில் உள்ள Ondobe இல் பிறந்தவர். 1998ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றவர். 2003ஆம் ஆண்டு திருப்பீடப்பணிகளில் ஈடுபடத்துவங்கிய இவர், பெனின், உருகுவே, ஸ்லோவாக்கியா, தாய்லாந்து, ஹங்கேரி, பெரு, ருமேனியா ஆகிய இடங்களில் திருப்பீடத்தூதரகத்தில் பணியாற்றியுள்ளார். பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலியன், போர்த்துகீசியம் மற்றும் ஸ்பானியம் மொழிகள் அறிந்தவர்.
ஐவரிகோஸ்ட் திருப்பீடத்தூதர்
4 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது 2016 முதல் 2020 வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வெளிநாட்டு பயணங்களின் அமைப்பாளராக இருந்து உலகம் முழுவதும் பயணம் செய்த பேரருள்திரு Mauricio Rueda Beltz அவர்கள் ஐவரிகோஸ்ட் திருப்பீடத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் திருத்தூதுப் பணியாளர்களுக்கான பிரிவின் துணைச் செயலாளராகப் பணியாற்றிய பேரருள்திரு Mauricio Rueda Beltz அவர்கள், கொலோம்பியாவின் பொகோட்டாவைச் சேர்ந்தவராவார். 1996 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவுபெற்ற இவர் திருஅவை சட்டங்களில் பட்டம் பெற்றவர். கினியா, சிலி, அமெரிக்கா மற்றும் ஜோர்தான் திருப்பீடத்தூதரகத்திலும் பணியாற்றியவர். பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலியன், போர்த்துகீசியம் ஆகிய மொழிகளை அறிந்தவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்