உக்ரைன் அமைதி தொடர்பாக வாஷிங்டனில் கர்தினால் Zuppi
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உக்ரைன் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற திருப்பீட முயற்சிகளின் ஒரு படியாக ஜூலை மாதம் 17 முதல் 19 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டனில் பயணம் மேற்கொள்கிறார் கர்தினால் Matteo Maria Zuppi.
திருத்தந்தையின் பிரதிநிதியாக அமெரிக்க ஐக்கிய நாட்டு தலைநகருக்கு பயணம் மேற்கொள்ளும் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Zuppi அவர்களுடன் திருப்பீடச் செயலகத்தின் அதிகாரி ஒருவரும் உடன்செல்கின்றார்.
போரால் பல்வேறு துயர்களை அனுபவித்துவரும் உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பவேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்கனவே உக்ரைன் மற்றும் மாஸ்கோ சென்று வந்த கர்தினால் Zuppi அவர்கள், அதன் தொடர்ச்சியாக தற்போது வாஷிங்டன் சென்றுள்ளார்.
உக்ரைனில் அமைதி திரும்ப அனைத்து முயற்சிகளையும் திருப்பீடம் எடுத்துவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஜூன் மாதத்தில் கர்தினால் Zuppi அவர்களை தன் பிரதிநிதியாக நியமித்து உக்ரைனுக்கும் மாஸ்கோவுக்கும் அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது மூன்று நாள் பயணமாக வாஷிங்டனுக்கும் அனுப்பியுள்ளார்.
உக்ரைனின் இன்றைய துயர நிலைகள் குறித்தக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும், மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவைப் பெறவும், குறிப்பாக குழந்தைகளின் நலனில் அக்கறைக் காட்டும் நிலையை உருவாக்கவும் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Zuppi அவர்களின் பயணங்கள் உதவி வருகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்