தேடுதல்

Ivrea மறைமாவட்ட முன்னாள் ஆயர் லூயிஜி பெத்தாட்சி Ivrea மறைமாவட்ட முன்னாள் ஆயர் லூயிஜி பெத்தாட்சி  

ஏழைகளுடன் மிக நெருக்கமாக இருந்த ஆயரின் மறைவு

இறைபதம் சேர்ந்த 99 வயதான இத்தாலியின் Ivrea மறைமாவட்ட முன்னாள் ஆயர் லூயிஜி பெத்தாட்சி அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்கேற்றவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

99 வயதான இத்தாலியின் Ivrea மறைமாவட்ட முன்னாள் ஆயர் லூயிஜி பெத்தாட்சி அவர்கள் இறைபதம் சேர்ந்ததையடுத்து திருத்தந்தையின் இரங்கல் செய்தியை அம்மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

Ivrea மறைமாவட்ட விசுவாசிகளுக்கும் முன்னாள் ஆயரின் உறவினர்களுக்கும் திருத்தந்தையின் ஆன்மிக அருகாமையை தெரிவிப்பதாகக் கூறும் திருப்பீடச் செயலர் பியேத்ரோ பரோலின் அவர்களின் இந்த அனுதாபச் செய்தி, அம்மறைமாவட்ட ஆயர் எத்வார்தோ ஆல்தோ செராத்தோ அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விவிலியம் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த முன்னாள் ஆயர் பெத்தாட்சி அவர்கள், ஏழைகளுடன் மிக நெருக்கமாக இருந்ததுடன், நீதி மற்றும் அமைதிக்காக உழைத்தவர் எனவும் திருத்தந்தையின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்களின் மனிதராக இருந்த ஆயர் பெத்தாட்சி அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டு தன் பங்களிப்பை வழங்கியதையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதியை கட்டியெழுப்புவதில் அயராது உழைத்த இத்தாலிய ஆயரான பெத்தாட்சி அவர்கள், இவ்வாண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி தன் 100வது வயதை நிறைவுச் செய்யவிருந்த வேளையில், ஜூலை 16, ஞாயிற்றுக்கிழமையன்று இறைபதம் சேர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2023, 14:29