தேடுதல்

மூவேளை செபஉரையின் போது திருத்தந்தை பிரான்சிஸ். மூவேளை செபஉரையின் போது திருத்தந்தை பிரான்சிஸ்.  

நிஜெரின் அமைதி மற்றும் சஹேலின் நிலைத்தத் தன்மைக்காக செபியுங்கள்

அண்மையில் புர்கினா பாசோ அருகே நடந்த தாக்குதலில் ஏறக்குறைய 17 வீரர்கள் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து மிக மோசமான தாக்குதல்களினால் நாட்டின் நிலைமை மிகவும் பதட்டமாகியுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நிஜெர் நாட்டில் அமைதி மற்றும் சாஹேல் பகுதியில் நிலைத்தத்தன்மைக்கு ஆதரவாக வேண்டுகோள் விடுத்த ஆயர்களுடன் தானும் இணைந்து வேண்டுகோள் விடுப்பதாகவும், மக்கள் அனைவரின் நலனுக்காக கூடிய விரைவில் அமைதியான தீர்வைக் காண பன்னாட்டு சமூகத்தின் முயற்சிகளுக்கு செபத்துடன் தான் துணை நிற்பதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செபஉரை அளித்ததைத் தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபிக்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இவ்வளவு காலமாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்காக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பல ஆண்டுகளாக, ஜிஹாதிகளின் தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிஜெர் பகுதி மக்களையும் நினைவுகூர்ந்தார்.

அண்மையில் புர்கினா பாசோ அருகே நடந்த தாக்குதலில் ஏறக்குறைய 17 வீரர்கள் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து மிக மோசமான தாக்குதல்களினால் நாட்டின் நிலைமை மிகவும் பதட்டமானதையும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2023, 12:55