தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

உக்ரைன் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி நிலவ செபியுங்கள்

உலகின் பல பகுதிகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வேளை, ஆயுதங்களின் சத்தம் உரையாடலுக்கான வழிகளைத் தடைசெய்கின்றது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்னை மரியாவே உமது விண்ணேற்புப் பெருவிழா நாளிலே, உக்ரைன் மற்றும் உலகின் பிற பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் என்ற எங்களின் மன்றாட்டை உன்பதம் சமர்ப்பிக்கின்றோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 15, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபவுரையின்போது இவ்வாறு இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் பல பகுதிகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்களின் சத்தம் உரையாடலுக்கான வழிகளைத் தடைசெய்கின்றது என்றும் தனது கவலையை வெளிப்படுத்திய திருத்தந்தை, ஆனாலும் நாம் அனைவரும் சோர்வடையாமல் தொடர்ந்து பயணிப்போம் ஏனென்றால், கடவுள்தான் வரலாற்றை வழிநடத்துகின்றார், அவர் நம் குரலைக் கேட்பார் என்றும் கூறினார்.

அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவில் பங்கேற்க வந்திருந்த அனைத்து நாட்டுத் திருப்பயணிகளுக்கும் தனது வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகவும் செபிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2023, 13:52