உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்திற்கு உயர் முதல்வர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உரோம் நகரின் ஜான் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் உயர் முதல்வராக பேரருள்திரு Alfonso Amarante அவர்களை நியமித்து, அவரை பேராயர் நிலைக்கும் உயர்த்தி, அவருக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உண்மையையும் நற்செய்தியின் மகிழ்வையும் கல்வி மற்றும் அழ்ந்த சிந்தனைகள் வழி எடுத்துரைக்கும் பணியில் இலாத்தரன் பல்கலைக்கழகம் மேலும் சிறப்புடன் செயல்பட இவரின் புதிய நியமனம் உதவும் என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதம் தொடர்புடைய அதேவேளை, சமூக அமைப்புமுறையையும் உள்ளடக்கிய இந்த பல்கலைக்கழகம், காலத்தின் அறிகுறிகளைக் கற்றுணர்ந்து அதற்கியைந்த முறையில் தன்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டிய தேவையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரோம் நகர் ஜான் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக் கழகத்தின் உயர் முதல்வராக செப்டம்பர் 12ஆம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ள பேரருள்திரு Amarante அவர்களின் நியமனம், புனித அல்போன்ஸ் மரிய லிகோரியின் திருவிழாவான ஆகஸ்ட் முதல் தேதி திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்